TN News Latest Updates: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (செப். 21) தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,"2026ம் ஆண்டு நல்ல மாற்றம் ஏற்படும் வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக தரப்பில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தி வருகிறோம், மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய் நிதியில் நாட்டின் உள்கட்டமைப்புக்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அணைக்கட்ட முயற்சி செய்ததை மத்திய அரசுதான் தடுத்து நிறுத்தியது. இதனால் தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அதிக அக்கறை கொண்ட நிலையில் அக்கறை இல்லாத தோற்றத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வருகிறார். மத்திய அரசின் திட்டம் தமிழகத்தில் இரட்டிப்பு செய்து வருகிறது, அதனை தமிழக பாஜக வெளிக்கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. 


ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற சாத்தியம் இல்லாததை சாத்தியமாக்குவதுதான் மோடியின் சாதனை. நாட்டில் ஏதாவது ஒரு மூளையில் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும்போது மத்திய அரசின் திட்டம் கிடைக்காது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்கள் வரிப்பணம் தேர்தலில் வீணாக செலவு செய்யப்படுகிறது. மூன்று தேர்தல் ஒரே நேரத்தில் செலவு செய்யும் போது ஆட்சிக்கும் கட்சிக்கும் பணம் மீதமாகும்.


மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்


இதனை 2029ஆம் ஆண்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் மத்திய அரசு சொல்லி உள்ளது. இதனால் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஏன் நடவடிக்கை இல்லை, விசாரணை ஏன் இல்லை என கேட்கும் அளவில்தான் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளனர்" என கேள்வி எழுப்பினார்.


மேலும், வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு வருடங்கள் கடந்தும் ஏன் சமூக நீதி அரசு என சொல்லும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கல்வி துறை அன்பில் மகஷே் ஆன்மீக சொற்பொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சத்துணவு உடன் வழங்கப்படும் முட்டை வெளியே விற்கப்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே போல தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பிரச்சினை உள்ளது.


முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம். கூட்டத்திற்கு போயிருந்தால் அதிக முதலீடு கொண்டு வந்திருக்கலாம். சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் 11 நாட்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சருக்கும் எப்போது உதயநிதி துணை முதல்வர் ஆவதில்தான் கவனமாக இருக்கிறார்கள். அமைச்சர்கள்தான் உதயநிதி துணை முதல்வர் பதவி ஏற்பது குறித்து வதந்தி பரப்பி விடுகின்றனர்.


திருப்பதி லட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நட்டா விளக்கம் கேட்டுள்ளார், விரும்பத்தகாத பொருள் சேர்த்து இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு கலப்படம் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆறுதலாக சந்திரபாபு நாயுடு தூய்மையான நெய் பயன்படுத்த இருப்பதாக சொல்லியுள்ளார். இதனால் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டது என்று அமைச்சர் சேகர் பாபு சொல்கிறார். ஆனால் பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும். 


விசிக மாநாடு கூட்டணியில் இருக்கிறானோ இல்லையா என்று திமுகவை பயமுறுத்தி பார்க்கதான் தொல் திருமாவளவன் மாநாடு அறிவித்துள்ளார். வரும் காலங்களில் கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்லும் நிலை மாறும். வரும் காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பலத்தை நிரூபிக்க பாடுபட வேண்டும். விசிக மதுவிலக்கு மாநாடு முன்பு திமுக மதுக்கடைகளை என்ன செய்ய போகிறோம், மது ஆலைகள் என்ன செய்ய போகிறோம் மாநில மதுவிலக்கு கொள்ளை என்ன என்பது குறித்து மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும்" என கேட்டு கொண்டார்.


மேலும் படிக்க | பெண்ணின் உடலை சூட்கேஸில் வைத்துச் செல்லும் குற்றவாளி: சிசிடிவி காட்சியால் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ