இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பா?... அண்ணாமலை விளக்கம்
இந்தியாவில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார மந்த நிலைக்கு சென்றுவிட்டன. எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைமையும் அப்படி ஆகிவிடுமோ என்று எதிர்கட்சியினர் கேட்டனர். அது பற்றிய பொய்யான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். அதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி இந்தியா உலகின் வேகமாக வளரக்கூடிய நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது. அடுத்த வருடங்களில் நமது வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதத்தை தாண்டி இருக்கும். சமீபத்தில் பொருளாதார வல்லுனர்கள் எந்த நாட்டிற்கு பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்பது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அதில் இந்தியாவில் பொருளாதார மந்த நிலைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பிராண்டட் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு கொண்டு வரவில்லை. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர்கள் வைத்த 56 பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டன. பிராண்டட் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ஜி.எஸ்.டி. கவுன்சில் கொண்டு வந்துள்ளது.
மேலும் படிக்க | சசிகலாவுக்கு நிவாரணம்: வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்
ஆனால் தமிழகத்தில் நிதி அமைச்சர் முன்னுக்கு பின் முரணாக, உண்மைக்கு புறம்பாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார். மத்திய அரசு மாநில அரசை வஞ்சிப்பதாகவும் கூறுகிறார். 2006-ம் ஆண்டு தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசில் ஜி.எஸ்.டி. வரி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகள் பல பரிமாணங்களுக்கு பிறகு 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏற்கனவே கிடைத்து வந்த வரி வருவாய் எந்த வகையிலும் குறையாமலேயே ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது” என்றார்.
மேலும் படிக்க | ‘ஈ’க்களால் ஊரையே காலி செய்யும் கோவை மக்கள் - உணவு சாப்பிட முடியாமல் தவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ