காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 7) மிகச் சிறப்பாக நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் திரு.செல்லமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் இயக்கம் ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.


இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் (Cauvery Calling)  இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் தங்கள் நிலங்களில் மதிப்புமிக்க மரங்கள் நடும் பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.


இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி, இம்மாதம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, இச்சிபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி திரு.சிவசாமி அவர்களின் நிலத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனர். குறிப்பாக, விவசாயிக்கு வருமானம் தரும் விதமாக செம்மரம், சந்தனம், வேங்கை, ஈட்டி ஆகிய மதிப்புமிக்க 3,200 மரங்கள் 9 ஏக்கரில் நடப்பட்டன.


மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள காவிரி கூக்குரல் இயக்கம் (Cauvery Caling) ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G