ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இஸ்ரோ தலைவர்... சந்திப்புக்கு என்ன காரணம்?
Tamil Nadu Latest: குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Tamil Nadu Latest: சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) தலைவர் சோம்நாத் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சோம்நாத், சந்திராயன்-3 விண்கலத்தின் மாதிரி உருவ சிலையை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் சோம்நாத்திற்கும் நினைவுப்பரிசை வழங்கினார்.
முதலமைச்சருக்கு நன்றி
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்,"இன்னும் இரண்டு ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் பணிகள் முடிவடையும். அதற்காக தமிழக அரசு 2000 ஏக்கர் நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் படிக்க | மீண்டும் கண் விழிக்குமா விக்ரம் லேண்டர்? இஸ்ரோ தகவல்!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி...
சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழகத்தை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருவதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள் 17 பேர் பதக்கங்கள் வென்றது பாராட்டத்துக்குரியது.
இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டுகள் பழமையானது. ஏவுகணைகள் இலங்கை வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திரகிரி ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள் விண்வெளி மற்றும் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்படும் இடமாக தமிழகம் விளங்குவது பாராட்டத்துக்குரியது" என்றார்.
வெற்றி பெற்ற சந்திரயான்-3
இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்கு ஆராய்ச்சி மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தியது. ஆக. 23ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தது. அதன்மூலம், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையையும், தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா ஒருங்க பெற்றது. மேலும், அங்கு சில நாள்கள் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில், தற்போது வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்து நிறைவு செய்துள்ளது.
மேலும் படிக்க | சந்திரனில் சூரிய உதயம்... தூங்கும் விக்ரம் லேண்டரை எழுப்ப தயாராகும் இஸ்ரோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ