மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இஸ்ரோவின் மிகப்பெரிய இலக்கு. அந்த திட்டத்தின் பூஸ்டர் சோதனை இன்று நடத்தப்பட்டது. அந்த சோதனையில் வெற்றி பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இஸ்ரோ. சோதனையின் போது திட ராக்கெட் பூஸ்டர் HS200 ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலை 7:20 மணிக்கு ஏவப்பட்டது. HS200 ராக்கெட் பூஸ்டர் என்பது LVM3 என பிரபலமாக அறியப்படும் GSLV Mk III செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் நன்கு நிரூபிக்கப்பட்ட S200 ராக்கெட் பூஸ்டரின் பதிப்பாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தொழில்நுட்பம் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்: மாநிலங்களவை எம்பி சுபாஷ் சந்திரா


இஸ்ரோ இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்த சோதனையை வெற்றிகரமாக முடிந்தது. இஸ்ரோவின் மிக முக்கியமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் பயணத் திட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்" எனத் தெரிவித்துள்ளது. ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டிற்கு, 4000 கிலோ வகையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்ட LVM3 ஏவுகணை வாகனத்தின் முதல் கட்டமான S200 மோட்டார், ஸ்ட்ராப்-ஆன் ராக்கெட் பூஸ்டராக கட்டமைக்கப்பட்டது. HS200 பூஸ்டரின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வடிவமைக்கப்பட்டது. உந்துசக்தி வார்ப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-ல் உருவாக்கப்பட்டது. 



சந்திரயான் வெற்றியில் இந்த ஏவுகனை மிக முக்கிய பங்காற்றியதால் எல்விஎம் 3 பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதர்களை அனுப்புவதற்காக இந்த ஏவுகணையில் பல மேம்பாடுகளையும் செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது. "பல்வேறு அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு பல வடிவமைப்பு மேம்பாடுகள் S200 பூஸ்டரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கூடுதல் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது" எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.  பூஸ்டர் சோதனையில், 203 டன் திட உந்துசக்தியுடன் ஏற்றப்பட்ட HS200 பூஸ்டர் 135 வினாடிகளுக்கு சோதிக்கப்பட்டது. சோதிக்கப்பட்ட பூஸ்டர் அளவில் உலகின் இரண்டாவது பெரிய பூஸ்டராகும். 


மேலும் படிக்க | சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR