விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது
நாடு முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா என்பது, இன்றல்ல நேற்றல்ல, அன்னியர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு அரசு தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார்.
Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா..!!
முன்னதாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு, தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என்று சட்டசபையில் பாஜக MLA காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபாட்டுள்ளவர்களும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி, தமிழக அரசு அனுமதி தர வேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த, பாஜக தலைவர் கே.அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனக் கூறியதோடு, பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் முன்பு வைத்து வழிபாடு நடத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.
அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ALSO READ | மதுரை ஆதீனம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR