சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 18 ஆம் தேதி தமிழகத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சரும்,  எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கவே வேண்டும் என்ற நோக்கத்திலேயே  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மக்களுக்கான இந்த சிறந்த திட்டத்தை திமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக மாற்றி அமைத்துள்ளது எனவும் இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மட்டும் இன்றி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அதிமுக சார்பில் பல்வேறு கேள்விகளும், விவாதங்களும் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை திமுக அரசு முழுமையாக ஆதரித்து நிறைவேற்றும் ஆட்சியைதான் செய்து வருவதாக குறிப்பிட்டார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் 1,588 கோடி ரூபாய் செலவில் ஆலை அமைக்கும் சாம்சங் நிறுவனம்!


அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டது அதிமுகதான் என குற்றம் சாட்டிய அவர், முதலில் ஓமந்தூர் தோட்டத்தில் சட்டமன்றம் திறக்கப்பட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதை மருத்துவமனையாக மாற்றியது யார் என சரமாரி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழடிக்க முயற்சித்தது ஏன் எனவும், கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் உள்ள கலைஞர் பெயரை நீக்கியது முதல், கடற்கரை பூங்காவில் உள்ள கலைஞர் பெயரை அகற்றியது உள்ளிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.


அதுமட்டுமின்றி, கலைஞர் கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்தினால் சமத்துவ புரங்களை பாழடித்தது ஏற்கமுடியாது ஒன்று என தெரிவித்த மு.க ஸ்டாலின், உழவர் சந்தையை மூடியது, நமக்கு நாமே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முடங்கியது, என அனைத்திலும் அதிமுகதான் அரசியல் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 


மேலும் படிக்க | பட்ஜெட்டில் பெண்களுக்கு 1000 ரூ : அரசு சொல்வது என்ன??


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR