சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் சென்னையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் தொழிலபதிபர் பாபு சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.130 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 117 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று காலை 5.15 மணி முதல், தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.