காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 


சோதனையில் நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காளீஸ்வரி நிறுவனம், சமையல் எண்ணை மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்த ஒரு நிறுவனம். காளிமார்க் குளிர்பான நிறுவனங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. 


சமீபகாலமாக பெப்சி, கோக்கை புறக்கணித்து விட்டு தமிழக நிறுவனமான காளிமார்க் நிறுவன பானங்களை பருகுமாறு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் பிரசாரம் செய்து வந்தனர் என்பது நினைவிருக்கலாம் தமிழகத்தில் சமீப காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் ஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றன. நேற்று ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.