தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாமக்கல் மாவட்டம் ஆண்டிப்பாளையத்தில் சத்துணவு திட்டத்துக்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனம் முட்டை, சத்துமாவு, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறது.


இந்த நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.