வருமானவரித்துறை சோதனை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மதுபான மற்றும் மின்சார ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். அவருக்கு சொந்தமான மற்றும் நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்து சோதனைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. 


மேலும் படிக்க | கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!


அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை 


நான்காவது நாள் தொடரும் இந்த சோதனையில் வருமானவரித்துறையினர் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அலுவலகம் பூட்டி இருந்ததால், போலீஸ் உதவியுடன் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். மூன்று கதவுகளின் பூட்டுகளை உடைத்து தற்பொழுது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஒப்பந்ததாரர் எம் சி சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான ஆல்ஃபண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வீடு, தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி எதிரில் அமைந்துள்ள சுரேந்தர் மெஸ் உணவகத்தில் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.


அமைச்சர் செந்தில் பாலாஜி ரியாக்ஷன்


இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது, வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். வருமானவரித்துறையினர் திடீரென சோதனையிட வந்ததால் சில அசம்பாவித சம்பவபங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். வருமானவரித்துறையினர் முதல் நாள் சோதனையிட வந்தபோது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகளை சுற்றிவளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார்களையும் அவர்கள் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கரூர் காவல்துறை இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை தொடங்கியுள்ளது. 


மேலும் படிக்க | செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை: சிபிஐ விசாரணைகோரிய மனு தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ