பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த டோக்கன்கள் ரெய்டில் சிக்கின

பணம் பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பல கோடி மதிப்பு உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 400 டோக்கன்கள் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட மொத்தம் 30 இடங்களிலும் வருமானவரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்பொழுது விடுதியில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என தகவல் கிடைத்துள்ளது.