வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தங்களுத பேரவை சார்பாக போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனு கொடுக்கலாம் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மேலும் ஒருவேளை தான் போட்டியிட்டால் அது நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்...


''வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் விருப்ப மனு பெறப்பட உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நேர்காணல் நடைபெற உள்ளது.


அனைத்து தொகுதிகளிலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தனித்து போட்டியிட உள்ளது. அதற்காக 40 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆதரவு எந்த அளவு உள்ளதோ அதை ஒட்டி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவெடுக்க படும். 


அதேவேலையில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து இடையில் காணாமல் போய்விடுகிறீர்கள், மீண்டும் திடீரெனத் தோன்றுகிறீர்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "தான் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றே அதிக நாட்கள் ஆகின்றன என தெரிவித்தார். மேலும் அரசியல் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று போகிறேன். மிரட்டல் அரசியல் வேண்டாம் என நினைக்கிறேன். கட்சி அரசியலில் இருக்கிறோம். காணாமல் போக முடியாது. நான் ஏற்கெனவே சொன்ன படி என்னையும், இந்த இயக்கத்தையும் அழிக்க பெரிய கூட்டம் இயங்கியது.


அதை சரி செய்ய இத்தனை காலம் பிடித்தது. அதை எல்லாம் களை எடுத்துவிட்டு, சரி செய்துவிட்டு தற்போது வழி நடத்துவதற்காக ஆயத்தமாக இருக்கிறேன். அந்த நேரத்தில் அதிமுகவில் சேர எனக்கு அழைப்பு விடுத்தார்கள். நாங்களும் அணுகினோம்" என தெரிவித்துள்ளார்.