ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த ஆண்டே டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு ஓய்வுபெற்ற  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஜனவரி 12ம் தேதிக்குள் ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


புகார் அளித்தோர், புகாருக்கு உள்ளானோர் என அனைத்து தரப்பினரையும் விசாரித்து வரும் இந்த ஆணையத்தில் தினமும் பல புதிய தகவல்கள் பதியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் தாக்கல் செய்யக்கோரி நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார். 


ஆனால் அப்பல்லோ மருத்துவமனை இதனை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுத ஆணையம் முடிவு செய்துள்ளது. அதில், ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் யார் யார் என்ற தகவல் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது 


சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை ராமமோகனராவ், ஷூலா பாலகிருஷ்ணன், பார்த்ததாக மருத்துவர் பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளார். 


செப்டம்பர் முதல்வாரம், டிசம்பர் 4-ம் தேதி ஆகிய நாட்களில் ஜெயலலிதாவை அண்ணன் மகன் தீபக் பார்த்துள்ளார். மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்ததாக 5 பேரும் நீதிபதி ஆறுமுகசாமியிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.