சென்னை: தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தெர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் மக்களைக் கவரும் வண்ணம் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த வண்ணம் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளும் ஆதிமுக கட்சி, தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரொக்கமாக 2,500 ரூபாயும் பொங்கல் பரிசும் (Pongal Gift) அளிக்கப்பட்டது.


இது தவிர, அரசு அலுவலர்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் முன்பணம் பெறும் வரம்பு உயர்வு, அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மழை நிவாரணத் தொகை அதிகரிப்பு என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டது.


தற்போது மற்றொரு அதிரடி அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறுவிப்பு தற்போது நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே (Tamil Nadu Assembly) வெளியாகக்கூடும் என்றும் அரசுக்கு நெருங்கியய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: இனி தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: TN Govt


தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கொரோனா தொற்று காலத்தில் அரசு இதை 59 ஆக உயர்த்தியது. எனினும், இப்போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயதை 60 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.


ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வயது உயர்த்தப்பட்டால், அதனால் கண்டிப்பாக அரசு ஊழியர்களுக்கு இது பெரிய ஜாக்பாட் செய்தியாக இருக்கும்.


எனினும், வாக்கு வங்கி அரசியல், ஊழியர்கள் நலம் என இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாகத் தெரிகிறது. தமிழக அரசின் (Tamil Nadu Government)  கஜானா சொல்லிக்கொள்ளும்படியாக செழிப்பாக இல்லை என்றும், இதுவும் இந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் ஒரு மிகப்பெரிய காரணம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.


தற்போது இருக்கும் ஓய்வு பெறும் வயது வரம்பின் படி, இந்த ஆண்டு சுமார் 30,000-க்கும் மெற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதிய செட்டில்மெண்டை செய்ய ஒரு மிகப் பெரும் தொகை தேவைப்படும். வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால், அந்த சுமை சற்று தளரும். அதற்காகவே இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது என்பது சிலரது கருத்தாக உள்ளது.  


தேர்தல் நெருங்கும் நிலையில், அரசு எடுக்கும் இந்த முடிவு மக்களை மகிழ்விக்க எடுக்கப்படும் ஒரு முடிவாக பலரால் பார்கப்பட்டாலும், இதனால் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பயன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


ALSO READ: சசிகலா சென்னை வரும் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR