ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சென்னை கீழ்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தற்போது கஜா புயலால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எவ்வாறு போராட்டம்... என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு "டிசம்பர் 4-ஆம் தேதிக்கு முன்னர் முதல்வர் தங்களை அழைத்து பேசினால் போராட்டத்தை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளோம்" என குறிப்பிட்டனர்.


மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் 14 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் ஊதியத்தை கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.