ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் வரும் ஜன., 7-ஆம் நாள் வரை ஒத்திவைப்பதாக ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாக்டோ ஜியோ அவசர உயர்மட்ட குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைப்பெற்றது. இக்கூட்டதிதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவிக்கையில்...


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கடந்த 4-ஆம் நாள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தோம். ஆனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருவதால் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம்.


இதற்கிடையில் எங்கள் வழக்கு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த மாதம் ஜன., 7-ஆம் தேதிக்குள் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். எனவே எங்களது போராட்டத்தை அடுத்த மாதம் 7-ஆம் நாள் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.


புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை தாக்கல் செய்தும், அரசு இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இருப்பினும் 21 மாத நிலுவை தொகை வழங்க அரசு தயாராக உள்ளதாக தெரிகிறது. 


எங்களை பொறுத்தமட்டில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என தெரிவித்துள்ளனர்.