ஜெ,மரணம்; சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கு சம்மன்!!
ஜெயலலிதா மரணம் தொடர்பான சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் அமைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.
அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 16 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதன் அடிப்டையில் சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
அந்த சம்மனில் சசிகலாவுக்கு இன்னும் 15 நாளில் பதிலளிக்க வேண்டும் என்றும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் பிரீத்தா ரெட்டி 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஜனவரி 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.