மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கியது.ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துவக்கி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.முதலாவதாக ஊர் மரியாதையை ஏற்கக்கூடிய கோயில் காளைகளை அவிழ்த்தனர். பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கி 1-மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் இறக்கினர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடிவரும் காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.


கடந்த வருடத்தை விட இந்தவருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது. சோதனைகளைக் கடந்து 954 காளைகளும், 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கான 5-வது சுற்று நிறைவடைந்து இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 54 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 248 காளைகள் களம் இறங்கியது.


ஜல்லிக்கட்டு சுமூகமாக நடைபெற்று வருவதாலும், அவிழ்த்துவிடப்படாத காளைகள் இருக்கும்பட்சத்தில் நேரம் நீட்டிக்கபட்டு உள்ளது. மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். இதையடுத்து, இனிதே எந்த குளறுபடியும் இன்றி ஜல்லிக்கட்டு நிறைவேறியது.