மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறுகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 964 காளைகளும், 623 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடக்கும் இப்போட்டியை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மோட்டார் பைக், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
10 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதித்துள்ளனர். 10 ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.