ஜல்லிக்கட்டு ஆதரவுவாக போரூரில் ஆர்ப்பாட்டம்- வீடியோ
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். நேற்றிரவு வரை நீடித்த இந்தப் போராட்டம் விடிய, விடிய இன்று காலைவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நேற்றிரவு மெரினா கடற்கரை சாலையில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் திடீரென அணைந்ததால் இந்தப் போராட்டம் புதிய வடிவமாக கைபேசிகளில் உள்ள டார்ச் லைட்களை தீபம் போல் மிளிரவிட்டு போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
சென்னை நகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள மெரினா கடற்கரையை நோக்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை போரூரில் நடந்த போராட்டத்தின் வீடியோ:-