பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி கட்டாயம் நடத்தி ஆக வேண்டும் என்று இளைஞர்கள், மாணவர்கள் மற்றும்  ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


அரசியல் கட்சிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.  சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டின் தாக்கம் அதிகரித்துள்ளது.


உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மதுரை மாவட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக சுமார் 3000-க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு  வருகிறது. எனவே அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டை திட்டமிட்ட படி நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றத்தில் உரிய உத்தரவுகளை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மதுரை, கோவை, சென்னை, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 


மதுரையில் இன்று 2-வது நாளாக மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.


பொங்கல் பண்டிகைக்கு  இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சக்கட்டதை எட்டி உள்ளது. 


உரிய அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று ஆர்வலர்கள்  அறிவித்துள்ளனர். இதனால் மதுரை  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.