கோலாகலமாய் துவங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.....
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம், சீறிவரும் மாடுகளைப் பிடிக்க காளையர்கள் ஆர்வம்....
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம், சீறிவரும் மாடுகளைப் பிடிக்க காளையர்கள் ஆர்வம்....
பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கியது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பல்வேறு நிபந்தனைகளுடன் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், போலீஸ் கமிஷனர் டேவிட்ஆசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த மாடு பிடி நிகழ்ச்சி நடந்து வருகிறது.
மொத்தம் 691 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.