ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்- ஓ.பி.எஸ்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக் கோரி துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி அனில் மாதவ் தவேவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக் கோரி துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி அனில் மாதவ் தவேவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நிச்சயம் காக்கப்படும். தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.