அலங்காநல்லூரில் இளைஞர்கள் வலுக்கட்டாயமாக  கைது செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும்  ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன, இதற்கு பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


அப்போது சீமான் கூறியதாவது:-


மக்கள் போராட்டத்தை ஒடுக்குவது சர்வாதிகாரம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையிலிருந்து அரசு விலகி நிற்கிறது. ஜல்லிக்கட்டு தடை என்பது எமது பண்பாட்டு மீது தொடுக்கப்பட்ட போர்.  வரும் 21-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும், எந்த இடத்தில் எப்படி நடக்கும் என்பது சஸ்பென்ஸ், காளைகள் சீறுவது மட்டும் உறுதி என தெரிவித்தார்.