ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம், ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் திரைப்படம்: 


ரஜினிகாந்த், பல ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்-பேக் கொடுத்துள்ள படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் இது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பல திரையுலகின் முன்னணி நடிகர்கள் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம், பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியாக கலெகட் செய்து வருகிறது. 


காவாலா பாடல்..


ஜெயிலர் படம் வெளியாகவதற்கு முன்னர், அதன் முதல் சிங்கிளாக ‘காவாலா’ பாடல் வெளியானது. இந்த பாடலில் நடிகை தமன்னா நடனமாடியிருந்தார். அனிருத்தின் இசையில், ஜானி மாஸ்டரின் நடன அசைவில் உருவாகயிருந்த இந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வெளியானது முதல் இன்று வரை பல ஆயிரக்கணக்கானோர் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். தற்போது வரை பல சமூக வலைதளங்களில் இப்பாடல் ட்ரெண்டிங்கிள் உள்ளது. இந்த பாடலை ஷில்பா ராவ் என்பவர் பாடியுள்ளார். 


ஜப்பான் தூதுவர் நடனம்..


காவாலா பாடலுக்கு, இந்தியாவிற்கான ஜப்பான் தூதுவர் ஹிரோஷி சுசுகி நடனமாடியுள்ளார். யூடியூப் பிரபலமாக விளங்கும் மயோ, காவாலா பாடலிற்கு ஹிரோஷி சுசுகியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். 



யூடியூபர் மயோ, தமன்னாவின் நடனத்தை அசத்தலாக ஆட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலையும் அவரது நடன அசைவுகளையும் ஜப்பானிய தூதுவர் ஹிரோஷி சுசுகி ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 


மேலும் படிக்க | ஷங்கரின் கெரியரில் ‘இந்த’ படம் மட்டும்தான் ஃப்ளாப்..!


ஜப்பானில் அதிதீவிர ரஜினி ரசிகர்கள்…


ஜப்பான் தூதுவருடன் நடனமாடிய யூடியூபர் மயோ சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, ஜப்பானிய தூதுவர் ஹிரோஷி சுசுகி குறித்த சுவாரஸ்ய தகவல்கள சிலவற்றை பகிர்ந்து கொண்டார். ஹிரோஷி, இந்தியா மற்றும் ஜப்பானிய மக்களை இணைக்கும் வகையில் பல வீடியோக்களை செய்து வருவதாகவும் இதனால்தான் காவாலா பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாட முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் காவாலா பாடலை மயோதான் ஹிரோஷிக்கு பரிந்துரை செய்துள்ளார். ஏனென்றால், ரஜினிகாந்த் ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமானவராம். ஜப்பான் நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்களின் அன்பை ரஜினிகாந்திற்கு தாங்கள் காண்பிக்க நினைத்ததாக கூறும் மயோ, ரஜினியின் கூலிங் கிளாஸ் ஸ்டெப்பை போடும் படி ஜப்பானிய தூதுவரை செய்ய சொன்னதாக கூறியுள்ளார். 


ஜெயிலர் வசூல்..


கடந்த 10ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா என தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் பல்வேறு திரையரங்குகளில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. சுமார் 2 ஆண்டுகள் இடைவெளியில், அதாவது அண்ணாத்த திரைப்படத்தின் பின்னடைவுக்கு பின் திரைக்கு வரும் ரஜினி படம் என்பதாலும், பீஸ்ட் படத்தினால் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்த நெல்சன் இயக்கிய படம் என்பதாலும் அனைத்து தரப்பினரும் ஜெயிலர் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். 


இதையடுத்து இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அந்த பதிவில், ஒரே வாரத்தில் 375 கோடிக்கும் மேல் வசூல் செய்த ஒரே தமிழ் படம் என்ற பெறுமையை ஜெயிலர் படம் பெற்றுள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் திரைப்படம் 450கோடிக்கும் மேல் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Record Maker Rajini: தமிழ் சினிமாவில் புது சாதனையை படைத்த ஜெயிலர்... அதுவும் ஒரே வாரத்தில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ