ஷங்கரின் கெரியரில் ‘இந்த’ படம் மட்டும்தான் ஃப்ளாப்..!

நடிகர் ஷங்கர் இன்று தனது 60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இவர் குறித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

Written by - Yuvashree | Last Updated : Aug 17, 2023, 04:55 PM IST
  • இயக்குநர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்.
  • இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்துள்ளன.
  • இவரது ஒரு படம் மட்டுமே ஃப்ளாப் ஆகியுள்ளது.
ஷங்கரின் கெரியரில் ‘இந்த’ படம் மட்டும்தான் ஃப்ளாப்..!  title=

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர், ஷங்கர். 1993ஆம் ஆண்டு வெளியான‘ஜென்டில் மேன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேன்ஞ்சர் என்ற படத்தையும் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். 

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுவது ஏன்..? 

கோலிவுட்டின் ஒரே பிரம்மாண்ட இயக்குநர், ஷங்கர் மட்டும்தான். இந்த பெயர், அவருக்கு ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து கிடைத்தது. ‘ஜெண்டில் மேன்’ திரைப்படத்தில், நேர்த்தியான திரைக்கதை மூலமாக பலரை ஈர்த்த ஷங்கருக்கு, அவரது அடுத்தடுத்த படங்களில் விதவிதமான பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். திரைக்கதையில் மட்டுமன்றி, கிராஃபிக்ஸ் மற்றும் சிஜி தொழில் நுட்பத்திலும் புதுமை புகுத்தி பலரையும் வாய்பிளக்க செய்தார். சிம்பிளான காட்சியிலும் 4 கார்களை பறக்க விட்டு அசத்தும் கலைவண்ணம் இவரிடம் மட்டுமே உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால்தான் இவருக்கு பிரம்மாண்ட இயக்குநர் என்ற பட்டம் கிடைத்தது. 

மேலும் படிக்க | நடிகையுடன் மேடையிலேயே எல்லைமீறி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா..!

ஷங்கரின் ஃப்ளாப் ஆன படம்..

இயக்குநர் ஷங்கர், தமிழ் படங்களில் பெரிதாக ஃப்ளாப் கொடுத்ததில்லை. அவ்வப்போது இவருக்கு ஆங்காங்கே நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், இவரது படங்கள் நல்ல வசூலையே பெறும். இவர், 1999ஆம் ஆண்டு ‘முதல்வன்’ படத்தை இயக்கியிருந்தார். இவரது முதல் படமான ஜெண்டில் மேன் படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன், முதல்வன் படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். தமிழக முதல்வரை நேர்காணல் செய்யும் பத்திரிகையாளன் ஒரு நாள் முதல்வனாக மாறுவதும், அதன் பிறகு தமிழகத்திற்கே பெரிய தலைவனாக உயருவதுமாக கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை இந்தியில் ‘நாயக்: தி ரியல் ஹீரோ’ என்ற பெயரில் 2001ஆம் ஆண்டில் இயக்கியிருந்தார் ஷங்கர். 

Nayak

இந்தியில் வெளியான ‘நாயக்: தி ரியல் ஹீரோ’ திரைப்படத்தில் பிரபல நடிகர் அனில் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். ராணி முகர்ஜி கதாநாயகியாக வர, அம்ரிஷ் பூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களால் ‘முதல்வன்’ திரைப்படம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவிற்கு இந்தி ரசிகர்களால் ‘நாயக்’ படம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. படம், விமர்சன ரீதியாக கொஞ்சம் வரவேற்பினை பெற்றாலும் வசூலில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. 

தமிழில் அடிவாங்கிய படங்கள்..

ஷங்கருக்கு தமிழிலும் சில படங்கள் சறுக்கி விட்டுள்ளன. சித்தார்த், ஜெனிலியா, நகுல், தமன் போன்ற பலர் நடிப்பில் 2003ஆம் ஆண்டு ‘பாய்ஸ்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் ஷங்கர். இந்த படம் இளைஞர்களால் வரவேற்கப்பட்டாலும் அன்றைய பெருசுகள் மத்தியல் ஏக வசனத்திற்கு ஆளாகியது. பதின்ம வயதினரின் உணர்ச்சிகள், பாலியல் தூண்டுதல்கள், காதல், திறமை என தலைப்புகளை இந்த படத்தில் ஷங்கர் தாெட்டிருப்பார். 

2015ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெருத்த எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த படத்திற்காக உடல் எடையை அதிகமாக ஏற்றி, இறக்கி கடின உழைப்பை காண்பித்திருந்தார் விக்ரம். ஆனால், படம் வெளிவந்தவுடன் “ஷங்கரின் அந்த பிரம்மாண்டம் இந்த படத்தில் இல்லையேப்பா..” என ரசிகர்கள் ‘உச்’ கொட்டியதை கேட்க முடிந்தது. 

‘எந்திரன்’ பட வெற்றிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்த ஷங்கர், அதை 2018ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார். முதல் படம் அளவிற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இப்படம் வசூல் ரீதியாக மாஸ் ஹிட் அடித்தது. 

மேலும் படிக்க | விறுவிறுப்பாக நடைபெறுகிறது விடுதலை 2 படப்பிடிப்பு..! ரிலீஸ் எப்போது தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News