சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் திமுகவினர். விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை. அதிலும் குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர்,விஞ்ஞானப்பூர்வமாக தங்களது முன்னோர் வழியில் பால் பாக்கெட்டில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவைக் குறைத்து அதன்மூலம் ஆதாயம் தேடியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்


மேலும் படிக்க | சாமானிய மக்களுக்கு உதவ மத்திய அரசுக்குத்தான் வாய்ப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. அதில் தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. அந்த பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய். வருடத்திற்கு 800 கோடி ரூபாய். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 75 கிராம் அளவுக்கு எடை குறைவாக உள்ளது.


மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல்


ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை என்பது எந்த வகையிலும் நியாயம் கிடைக்கச் செய்யாது" என்றார்.


மேலும் படிக்க | ’கட்டணத்தை முழுமையாக கொடுக்க வேண்டும்’ யுஜிசி போட்ட அதிரடி உத்தரவு; மாணவர்கள் ஹேப்பி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ