12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுதி அதன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பாடப்பிரிவை தேர்ந்தெடுந்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்திருக்கின்றனர். ஒருவேளை நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள் வேறு மாதிரியாக வரும்பட்சத்தில் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் தொடருவார்கள். முடிவு சாதகமாக இருந்தால் கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப மருத்துவம், என்ஜினியரிங் உள்ளிட்ட பாடங்களில் கிடைக்கும் உயர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிடுவார்கள்.
மேலும் படிக்க | புதிதாக 44 படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
அந்த சமயத்தில் சில கல்லூரிகள் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகர் யுஜிசி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த யுஜிசி, அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை, கல்லூரி நிர்வாகங்கள் முழுமையாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சேர்க்கையை ரத்து செய்வதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.
யுஜிசியின் இந்த உத்தரவு நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சில கல்வி நிறுவனங்கள் சேர்க்கையை ரத்து செய்வதற்காக செலுத்திய கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வதாகவும் புகார் எழுந்த நிலையில், யுஜிசி இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளது. யுஜிசியின் இந்த புதிய உத்தரவு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பள்ளிகளின் சொத்துக்கு பெற்றோர்கள்தான் பொறுப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ