எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு. எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதி மட்டும் தான் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேச இரண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. அப்போது பேசிய கிருஷ்ணசாமி அதிமுக மற்றும் பாஜக அரசின் புகழ்களைப்பாடி இவைகளுக்கு தமிழக ஊடகங்கள் நன்றி சொல்ல மறுக்கின்றனர் எனக் கூறினார். மேலும் ஊடகங்கள் செய்த தவறான பிரச்சாரங்களால்தான் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் தோற்றது எனக் கூறினார். இதனால் பத்திரிக்கையாளர் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல கூச்சல் அதிகமானது.


அப்போது ஒரு நிரூபர் நீங்கள் ஏன் தோற்றீர்கள்? எனக் கேட்க எரிச்சலான கிருஷணசாமிநீ யாருப்பா... உனக்கு எந்த ஊரு? நீ என்ன சாதி? இவன் எப்ப பாத்தாலும் என்னை இப்படிதான் கேட்பான் எனப் பேசினார். இவரின் இந்த உரையாடல் சர்சையை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும் கிருஷ்ணசாமியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.


இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்; " அமைச்சர் பதவிக்காக அதிமுகவில் இருதரப்பு போட்டி நிலவுவதாக வந்த தகவல் கற்பனையே என்றும், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா? இல்லையா என கட்சி தலைமையே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியளார்களிடம் பேசியது குறித்த கேள்விக்கு, எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான், கிருஷ்ணசாமி வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான் என கூறினார். 


மேலும், மக்களவை தேர்தலில் அமமுக கட்சிக்கு பூஜ்ஜியம் வந்ததற்கு  ஓட்டு போடாதது தான் காரணம் என குறிப்பிட்ட அவர், ஒரு ஷீரோவே ஷீரோ எப்படி வந்தது என ஆராய்ச்சி செய்வதாக" விமர்சித்தார்.