இரட்டை மலை சீனிவாசனின் 164-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர். தீண்டாமையை  உலகத்துக்கு அறிய வைத்தவர். பட்டியலின மக்களை கிராம நிர்வாக அலுவலர்களாக கொண்டுவர பாடுபட்டவர் என புகழாரம் சூட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!


தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. அமைச்சர் பதவியை விட்டு  நீக்கவேண்டும் என்பது தான் அதிமுக நிலைப்பாடு. விசாரணை சிறைக்கைதிக்கு எப்படி அமைச்சர் பதவியை கொடுக்கலாம். அதிமுக முன்னாள் அமைச்சர்களை கழக பணி செய்யவிடாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்க, அவசர கோலத்தில் கோப்புகளை அனுப்பினால் ஆளுநர் கண்ணை கட்டிக்கொண்டா கையெழுத்து போடுவார். பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது. அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது.


ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீதான தீர்ப்பு குறித்து கேட்கிறீர்கள். கட்சிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அதிகமான அளவு தேர்தல் செலவு செய்து மகன் மட்டும் ஜெயித்தால் போதும் என ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார். பெரியகுளம், ஆண்டிப்பட்டி தொகுதிகள் தோற்க வேண்டும் என நினைத்தார் என சாடினார். மேலும்,  கோவையில் டிஐஜி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விசாரணையில் இருக்கிறது. அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என ஜெயக்குமார் கூறினார்.


பாஜக தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியசாமியை செய்த விமர்சனத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், அண்ணாமலை மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விம்ச்சித்தார் .நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். தவறை உணர்ந்து அண்ணாமலை திருத்தி கொண்டார் என்றார். பாஜகவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.


மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ