கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே உள்ளார் என ஜெயகுமார் விமர்சனம்...
கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே உள்ளார் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்....
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள என பலர் பலியாகினர். இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியது. நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
கஜா புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவும், பாதிப்படைந்த மக்களை சந்திக்கவும் செல்லவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் எழுந்தது.
இதையடுத்து, இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டனர். இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் மக்கள் மையம் தலைவர் கமல்ஹாசன் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த மாவட்டனகளை பார்வையிட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்க்கு தமிழக மீவலத்துரை அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியால்றகளிடம் அவர் கூறுகையில், சேத விவரங்களை தமிழக அரசு சரியாக மதிப்பீடு செய்துள்ளது. கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை குறித்து மத்திய குழுவிடம் விளக்கி கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ரூ 55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட முயற்சியால் மத்தியக்குழு தமிழகம் வந்துள்ளதை பாராட்ட வேண்டும். தமிழக அரசு கேட்ட புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என நம்பிக்கை உள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.
அதனை தொடர்ந்து முதல்வர் ஹெலிகாப்டர் ஆய்வு செய்ததை தூரத்து பார்வை என கமல் விமர்சித்தற்கு பதில் அளித்த ஜெயக்குமார், கமல் இன்னும் குழந்தையாகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல் இருக்கிறார். சட்டசபையில் அரசியல் செய்யுங்கள், புயல் பாதித்த 12 மாவட்டங்களில் செய்யாதீர்கள் என தெரிவித்தார்.