சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதேசமயம், ஆளுநர் இதுவரை வராத காரணத்தால், சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்கவில்லை.


இதனிடையே, அதிமுக தலைமை மீது அதிருப்தி தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன். மக்கள், தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்றும் கூறியிருந்தார்.


அதேபோல், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை, ஓ. பன்னீர்செல்வமே முதல்வர் பணிகளை கவனிக்க வேண்டும் என ஆளுநர் கூறியிருந்தார்.


இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.