அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்: தெருக்களை அலங்கரித்த கோலங்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
காசிமேடு, சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காசிமேடு பவர் குப்பம் பகுதியில் வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. வட சென்னை வடகிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கோலப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீட்டு வாசல்களில் கோலமிட்டனர்.
சேலத்து சிங்கம் எங்கள் தங்கம்
காசிமேடு பவர் குப்பம் பகுதியில் நடைபெற்ற கோலப்போட்டியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் உருவங்கள் வரையப்பட்டன. மேலும் எடப்பாடி பழனிச்சாமி உருவமும் வரையப்பட்டதோடு, பாட்டாளி மக்களின் சொத்து, சேலத்து சிங்கம் எங்கள் தங்கம்,40ம் நமதே உள்ளிட்ட வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கோலங்களை கண்டு ரசித்த வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ், அதிமுகவின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.
மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?
பின்னர் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பற்றி கூறிய அவர், திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டதாகவும் கூறினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஜெயலலிதாவின் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதனை அடுத்து கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு. முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக 3000 ரூபாய், மூன்றாவது பரிசாக 2000 ரூபாய் என அவர் பரிசுகளை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழக மக்களால் ‘அம்மா’ என அன்பாக அழைப்படுகிறார். அம்மா என்ற சொல்லுக்கு ஏற்ப அவர் தாயுள்ளம் கொண்டு மக்களுக்கு பல நல்ல நலத் திட்டங்களைக் கொண்டு வந்தார். மக்களின் பசி போக்கிய ‘அம்மா உணவகம்’ அவற்றில் முக்கியமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகின்றது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழக அரசியலில் மறுக்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் அவர். அவர் 1948, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தார். ஒவொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் அதிமுகவினர் அவரது பிறந்த நாளுக்காக பல வித நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ