சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா வழக்கு தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா புஷ்பா அளித்த மனுவில் கூறியதாவது:- ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அட க்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியது போன்ற அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரது மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின் றனர். ஆதலால், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையில் என்ன நடந்தது, என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்ப ட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆதலால், ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


முன்னதாக டிராபிக் ராமசாமி அளித்த மனுவில் கூறியதாவது:- ஜெயலலிதா மரணம் குறித்து பல சந்தேகங்கள் இருக்கிறது. அவர் மரணம் குறித்து சந்தகங்களுக்கு விடை கிடக்க வேண்டும். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் எனவும்,  உடல் நலக்குறைவால் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் கேமரா காட்சிகளை ஆராய வேண்டும். மேலும் அப்பல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.