கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 140 இடங்களில் 91 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடதுசாரி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் "பினராயி விஜயன்" தேர்ந்து எடுக்கப் பட்டார். அவருடன் 18 மந்திரிகளும்  பதவி ஏற்றனர்.


இந்நிலையில் பினராயி விஜயன்,  பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரைச் சந்திக்க டெல்லி வந்தார் , அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது. எவ்வித ஆபத்தும் இல்லை என நிபுணர் குழு அறிக்கையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதல் எந்தவித சந்தேகமும் இல்லை. அணையை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். இதுதொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு காணப்படும் என்றார், அதன் மூலம் தமிழக அரசுடன் இடது  சாரிகள் முன்னணி கட்சியின் பிரதமர் வேட்பாளர் "பினராயி விஜயன்" சுமூகமான உறவை விரும்புவது காட்டியுள்ளது.


இந்தநிலையில் பினராயி விஜயனுக்கு முதலாமைச்சர் ஜெயலலிதா இன்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளா மாநில சட்டசபை தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து நீங்கள் புதிய முதலாமைச்சராக பதவி ஏற்றுள்ளீர். உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் கேரளா மாநிலம் வளர்ச்சியும், செழுமையும் பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.