மதுரை தோப்பூரில் அமைக்கப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை வலியுறுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பிப்ரவரி 24ம்தேதி அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச திருமணங்கள் உள்பட பல்வேறு விழாக்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதா பெயரில் மிதிவண்டித் திட்டம். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.