ஜெ., விரைவில் வீடு திரும்புவார்: அப்பல்லோ தலைவர் பேட்டி
அப்பல்லோவின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி "ஜெயலலிதா முற்றிலும் குணமடைந்து விட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். முதல்- அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். முதல்வரின் விருப்பம் பொருத்தே அவர் வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். முதல்வருக்கு இருந்த நோய் தொற்றுகள் குணமாகி விட்டன.
நேற்று 51-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. அதிகாலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து வெகு நேரம் அவர் இயல்பாகவே மூச்சு விட்டார். எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெகு விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அமைச்சர் உடல் நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறை கொண்ட சிறப்பு வார்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓர் இரு நாட்களில் முதல் அமைச்சர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படலாம் என நம்பதகுந்த தகவல் வந்துள்ளன.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக் டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு நல் ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.