தமிழக முதல்வராக தொடர்ந்து 2வது முறையாக ஜெயலலிதா பதவி ஏற்பு:
இன்று 6-வது முறையாகவும் மற்றும் தொடர்ந்து 2வது முறையாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க உள்ளார். மேலும் அவருடன் 28 பேர் அமைச்சர்களும் பதவியேற்கா உள்ளனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் பதவிப் பிரமாணமும் மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழா பகல் 12 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பதவியேற்ப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, அவரின் மத்திய அமைச்சர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பதவியேற்ப்பு விழா நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழக வளாகமும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் அதிமுக கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளன.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு 2 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளுக்கு மே16-ந் தேதி தேர்தல் நடந்தது. 232 தொகுதிகளிலும் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை வேட்பாளர் மற்றும் மக்களிடம் ஏற்பட்டது.
கடைசியாக வாக்குப்பதிவு நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது.