ஜெ., சுய நினைவோடுதான் கை ரேகை பதிவு செய்தார்: டாக்டர்கள்
மூன்று தொகுதி தேர்தலுக்கான ஆவணங்களில் சுய நினைவோடுதான் ஜெயலலிதா கை ரேககை பதிவு செய்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
சென்னை: மூன்று தொகுதி தேர்தலுக்கான ஆவணங்களில் சுய நினைவோடுதான் ஜெயலலிதா கை ரேககை பதிவு செய்தார் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அப்பல்லோவில் சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் மற்றும் சீனியர் மருத்துவர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, தஞ்சை உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் கை ரேகையுடன் வெளியானது.
இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, டாக்டர் பாலாஜி கூறுகையில்:-
"அக்டோபர் 27-ம் தேதி தேர்தல் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுய நினைவோடுதான் இருந்தார். தேர்தல் தொடர்பான விஷயங்களை நான் படித்து காட்டினேன். கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார். விரலில் மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. எனவே அவரிடம் கைரேகை பெறப்பட்டது.
இவ்வாறு பேசினார்.