மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்று 70வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இன்று 1500 சிறைக் கைதிகள் விடுதலை பெறுகின்றனர். முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். 


இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள சிறைக் கைதிகளில் 1,500 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 340 பேர் பாளையங்கோட்டையில் 300 பேர் உட்பட 1,500 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.