பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சசிகலாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா இன்னும் ஒருசில நாட்களில் விடுதலையாகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட செய்தி அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுக்கு (Sasikala) சிறையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை  அளித்தனர். 


சசிகலாவுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொரொனா தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள்ளார். 



பெங்களூரு சிறையில் இருந்து பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார்.  சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி


சசிகலாவின் வருகையால் எதிர்வரும் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிய டி.டி.வி தினகரன் (TTV Dinakaran) தற்போது என்ன செய்வார் என்றும் கேள்விகள் எழுகின்றன.


முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செவ்வாயன்று முன்னாள் முதல்வர் எம்.ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கண்டிப்பாக மீண்டும் கட்சிக்குள் வரமாட்டார் என்று தெரிவித்திருந்தார்.“அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அவர் கட்சியின் ஒரு அங்கம் அல்ல என்பது எனக்கு 100% உறுதியாகத் தெரியும்” என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் ஊடகங்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (Edappadi K Palaniswami) கூறினார்.


கடந்த மாதம் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவதாக அறிவித்த சில நாட்களிலேயே அரசியலில் ஈடுபட போவதில்லை என்று தெரிவித்து விலகிவிட்டார். சசிகலா, சிறையில் இருந்து வந்தது, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்துமா? அல்லது பல சிக்கல்களை தீர்த்து வைக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது.


ALSO READ: கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR