ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் சசிகலா அம்மையார் அவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


இந்திய ராணுவ முப்படை அதிகாரிகள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வாகனத்தில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டது. ராணுவ பீரங்கி வாகனம் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.


இறுதி ஊர்வலத்தில் அதிமுக எம்எல்ஏ -க்கள், மந்திரிகள், தொண்டர்கள், ஜெயலலிதா இறுதி ஊர்வலத்தில் லட்சகணக்கான மக்கள் பங்கேற்பு. மேலும் இறுதிச்சடங்கில் தமிழக அளூநர் வித்யாசாகர ராவ், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திருநாவுக்கரசர், வைகோ ஆகியோர் பங்கேற்கின்றனர்.


சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. 


ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் வீடியோ.



ராஜாஜி மண்டபத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தொண்டர்கள் கதறி அழுகை. 


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.



குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜெயலலிதா உடலுக்கு தனது அஞ்சலி செலுத்தினார்.



மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.



மதிமுக தலைமை வைகோ ஜெயலலிதாவுக்கு தனது கடைசியின் சார்பாக அஞ்சலி செலுத்தினார், அதிமுக தகவல்.



ராஜாஜி மண்டபத்திலிருந்து காட்சிகள்: ஆயிரக்கணக்கான அம்மாவை பார்வை இட வரிசையாக வருகிறார்கள்.


சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற வருகிறது.



ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.



கர்நாடக முதல்வர் சித்தராமையா ஜெயலலிதாவுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்த சென்னையின் ராஜாஜி ஹால் வந்தார்.


சென்னை ராஜாஜி ஹால் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார், சிறிது நேரம் கழித்து பிரதமர் மோடி தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.


பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ.



 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி ஹாலுக்கு வந்து ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்


கோயம்புத்தூர் (தமிழ்நாடு): ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காட்சி ஆதரவாளர்கள் துக்கம் அடைந்து தலையை மொட்டை அடித்துக்கொண்டனர்.



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேரில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, முதல்வர் பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார். 



மறைந்த ஜெயலலிதா உடலுக்கு ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் ராஜாஜி ஹாலுக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.


பிரதமர் மோடி சென்னை விரைந்தார். ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு புறப்பட்டார்.


பார்க்க:- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாக்கு இரங்கல்.



சபாநாயகர் சுமித்ரா மகாஜன்- ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் தான். ஜெயலலிதா மிக நல்ல நிர்வாகியாக இருந்தார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து இன்று நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து இன்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜ்நாத் சிங்- ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவராக இருந்தார். அவர் இந்திய அரசியலில் ஒரு ஐகான் உருவெடுத்தார். அவரது மரணம் துக்கம் ஏற்படுத்தி உள்ளது.


பீகார் முதல்வர் நிதிஷ் குமார்- ஜெயலலிதாவின் இழப்பு தமிழக அரசியலுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் தான். 


இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா பீச் எம்.ஜி.ஆர் சமாதி அருகே ஜெயலலிதா உடல் நல்லடக்கம். ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்.




சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். 



லட்சக்கணக்கான பொது மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதையை செலுத்தும் வருகின்றன.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி தெரிவித்தார்.



குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதையை செலுத்த இன்று சென்னை பயணம்.


அனைத்து அரசு கட்டிடங்களிலும், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னைக்கு புறப்பட்டார்.



கோயம்புத்தூர் (தமிழ்நாடு): அதிமுக ஆதரவாளர்கள் கதறி கண்ணீர் விட்டனர்.



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வீரப்புதல்வி என்று கூறி டிவிட்டாரில் இரங்கல் தெரிவித்தார். 



ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சென்னையில் அணைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.



ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் தமிழக அரசு துக்கம் அனுசரிப்பு மேலும் 3 நாட்கள் பள்ளி கல்லூரி விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பு.


ஜெயலலிதா இறுதி சடங்கு மாலை 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் நடைபெற்ற உள்ளது என்று அதிமுக உறுதிப்படுத்தியுள்ளது.