"ஜெயலலிதாவின்'' 70ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்று 70வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டது 


ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.