ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால எதிர்கொள்ளத் தயார் என அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முன்னால் முதல்-அமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். 


ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்ககப்ட்டன. 


இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதாவது:- ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த போது யாரும் தலையிடவில்லை. சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை. யாருடைய தலையீடும் இன்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார். மேலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் அதனை சந்திக்க தயாராக உள்ளேன் எனக் கூறினார்.