புதுடெல்லி : முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள் முதல்வர் குணம் அடைய பிரார்த்தனை:-


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி : ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கேட்டு வேதனை அடைந்துள்ளேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.



வெங்கைய்ய நாயுடு : முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை குறைவு மிகவும் சோகத்தை தருகிறது.  ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் ட்விட் செய்தார்.



மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு செய்தி மிகவும் துன்பத்தை தந்தது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, அவர் புறன குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.



ராகுல் : ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவரது உடல்நிலை விரைவில் குணமடையும் என நம்புகிறேன்.



மம்தா பானர்ஜி : ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் எனது நண்பர்களும், நானும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் அவரை காக்க வேண்டும்.



தமிழிசை சவுந்தரராஜன் : தமிழக முதல்வர்  மாண்புமிகு ஜெயலலிதா  உடல்நிலையில் பின்னடைவு எனக்கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். பூரணகுணமடைய வேண்டுகிறேன்.



மு.க. ஸ்டாலின்: முதல்வருக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சைகள் பலனளித்து விரைவில் நலம் பெற விரும்புகிறேன்.



கலைஞர் கருணாநிதி: தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரைவில் பூரண நலம் பெற விழைகிறேன்.



முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பற்றிய தகவல் பரவியதில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், அப்பலோ மருத்துவமனை அமைந்துள்ள சாலை முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.