ஜெ., உடல் நிலை பற்றி குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் வெளியீடு!
ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் குடியரசுத் அதிமுக, தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகல் வெளியீடு....
ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் குடியரசுத் அதிமுக, தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகல் வெளியீடு....
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், கடந்த மாதம் 19 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில், கேள்விப் பட்டியலுடன், விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தது. இதில், கேள்விகளுக்கு ஆம்-இல்லை என்கிற அடிப்படையில் ஆளுநர் மாளிகை, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு பதிலளித்துள்ளது.
மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோதும், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகும், அதுகுறித்து ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதங்களின் நகல்களையும் ஆளுநர் மாளிகை, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இந்த இரண்டு கடிதங்களில் முதல்முறை எழுதப்பட்ட கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகத் தொடங்கியதாலும், சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கியதாலும், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி மாலை அப்பலோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்பலோ தலைவர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்ததாக வித்யாசாகர் ராவ் கடிதத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டுக்கு சென்று பார்த்ததாகவும், அப்போது அவர் மருந்துகளால் தூக்க நிலையில் இருந்ததாகவும் அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை அறிக்கைகள் வெளியிடுவதை உறுதிப்படுத்துமாறும், சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டதாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.