ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவையின் சார்பில் போட்டியிடுவேன் என தீபா தெரிவித்தார். 


இதைக்குறித்து தீபா கூறியதாவது:-


ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.


 



 


ஜெயலலிதாவின் ஆன்மா என்னை வழிநடத்தும். மக்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன். யாரிடமும் நான் இதுவரை ஆதரவு கேட்கவில்லை.


 



 


திமுக மற்றும் சசிகலா அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. மற்ற அணியினர் ஆதரவு தந்தால் அதை ஏற்றுக்கொள்வேன்.


எதிரிகள் எத்தனை பேர் தடுத்தாலும், அவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினருக்கு, இந்த இடைத்தேர்தல் மறக்க முடியாத பாடத்தை கற்றுத் தரும். அவர்கள், யாரும் வெற்றிபெறக்கூடாது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.


 



 


முன்பு பன்னீர்செல்வத்தை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான் என்று அவர் கூறினார்.