ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலம் பாதிப்பு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த ஆண்டே டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது தொகுதியான ஆர்கே நகருக்கு நாளை இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோ தொடர்பாக முதல்முறையாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். 


மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோவை அவர் தேர்தல் நேரத்தில் வெளியிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களான தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில் வெற்றிவேலின் இந்த செயல் கீழ்த்தரமானது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை எடுத்தது அப்போலோவா? போயஸ் இல்லமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 இந்நிலையில் வெற்றிவேலின் இந்த செயல் கீழ்த்தரமானது என்று இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து உள்நோக்கத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்றும். 


மேலும், அவர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது விசாரணை ஆணையத்தில்தான் தரவேண்டும். தன்னிச்சையாக இந்த வீடியோவை வெளியிடலாமா? இந்த வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதிமீறலாகும்.பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை இப்படி வீடியோ எடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த வீடியோ காட்சிகள் குறித்து ஜெயலலிதாவின் தோழி கீதா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து நாங்கள் டிசம்பர் 20ம் தேதி வழக்கு போட்டோம், அப்போதே வீடியோவை வெளியிட்டிருக்கலாமே. அப்போதும் அவர் உயிருடன் இல்லையே, அன்று வெளியிடாமல் ஒராண்டு காத்திருந்தது ஏன்?


மேலும், அவர் அந்த வீடியோவில் வருவது ஜெயலலிதா அல்ல அவரை போலவே மார்பிங் செயப்பட்ட ஒரு பொம்மை என்றும் தெரிவித்துள்ளார்.