முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த சிறுதாவூர் பங்களா வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அணைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து ஓய்வு எடுப்பார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த பங்களா பெரும்பாலும் பூட்டியே உள்ளது. 


இந்த நிலையில் நேற்று பங்களாவின் வளாகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் காய்ந்து அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சிறுசேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து, தீயை அணைக்கும் பணியில் மார் 5 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு அணைத்தனர்.


இந்த தீவிபத்தில் சிறுதாவூர் பங்களாவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறியுள்ள போலீசார் சமூக விரோதிகளின் சதியால் இந்த தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று சந்தேகித்து வருகின்றனர்.